ரெப்போ வட்டி விகிதம் 6.5% தொடரும் - சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாக நீட்டிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என்றும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது என்று தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.  

Night
Day